நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக வெள்ளிக்கிழமை முதலே மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.*

இந்த ஆண்டு தீபாவளி ஞாயிறன்று வரும் நிலையில் மறுநாள் திங்களன்று வேலை மற்றும் கல்வி நிலையங்களுக்கு திரும்ப மிகவும் சிரமம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து கூடுதலாக நவம்பர் 13 ம் தேதி திங்களன்று பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளியூர்களுக்கு செல்லும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.