ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கார் பரிசு” -டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பு

Must read

புதுடெல்லி:
லிம்பிக் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கார் பரிசு அளிக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வணிகத் தலைவர் ஷைலேஷ் சந்திரா, ஒலிம்பிக் போட்டியில் நம் நாட்டை பிரதிநிதித்துவப்ப்டும் விளையாட்டு வீரர்களின் முயற்சிகளைப் பாராட்ட வேண்டும். அவர்கள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை இழந்து இருந்தாலும், மில்லியன் கணக்கான இந்தியர்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ளனர். அவர்களது அர்ப்பணிப்பு உணர்வு இந்தியாவில் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது என்றார்.

மேலும் பேசிய அவர், இந்த வீரர்களைக் கவுரவிக்கும் வகையில், எங்களது டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அவர்களுக்கு கார் பரிசளிக்க உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

More articles

Latest article