டில்லி

ர் இந்தியா நிறுவனப் பொறுப்புக்கள் முழுமையாக டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது

அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கடுமையான கடன் சுமையில் சிக்கி தவித்தது.   இதை சீர் செய்ய மத்திய அரசு கடும் முயற்சிகள் எடுத்தும் இழப்பைச் சரிக்கட்ட முடியாமல் மேலும் இழப்பு ஏற்பட்டது.  இதையொட்டி ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்யப் பல வருடங்களாக அரசு முயன்று வருகிறது.  தற்போது டாடா நிறுவனம் ஏலத்தின் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கி உள்ளது.

சுமார் ரூ,.70000 கோடி நஷ்டத்தில் இயங்கும் இந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் ரூ.18000 கோடி விலைக்கு  வாங்கி உள்ளது.  இதில் ரூ. 2700 கோடி ரொக்கமாகவும் ரூ.15,300 கோடி கடனை ஏற்றுக்கொள்வதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்த நிறுவனத்தின் முழுப்பொறுப்பையும் டாடா ஏற்கிறது.  ஏற்கனவே இந்த பணிகள் தாமதமானதால் இன்று அதாவது டிசம்பர் 27 முதல் டாடா குழுமத்தைச் சேர்ந்த டேலெஸ் நிறுவனம் பொறுப்பேற்கிறது.   இன்று இதையொட்டி டாடா சன்ஸ் தலைவரான என் சந்திரசேகரன் பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார்.

தற்போது ஏர் இந்தியா நிறுவனம் முழுமையாக டாடாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   ஏர் இந்தியாவின் அனைத்து பங்குகளும் டாடா குழுமத்தில் டேலெஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.   ஏர் இந்தியா நிறுவன இயக்குநர் குழு கலைக்கப்பட்டு புதிய இயக்குநர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.  சுமார் 69 ஆண்டுகளுக்கு முன்பு டாடா நிறுவனத்திடம் இருந்து அரசுடைமை ஆக்கப்பட்ட நிறுவனத்தை டாடா குழுமமே மீண்டும் வாங்கியுள்ளது.