சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய  டாடா நிறுவன செயல்தலைவர்!

Must read

 

உலகப் புகழ் பெற்ற டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளது நாம் அறிந்ததே.

இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த இவர், இந்த பொங்கல் பண்டிகையை தனது சொந்த ஊரில் கொண்டாடினார்.  தன் பெற்றோரிடம் ஆசி பெற்று தங்கள் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று தரிசனம் செய்தார்.

மோகனூர் அக்ரஹாரத்தில் உள்ள தனது வீட்டில் தனது உறவினர்களுடன் பேசி மகிழ்ந்து பொங்கலைக் கொண்டாடினார்.

இவரது வருகையை அறிந்து செய்தியாளர்கள் வந்துவிட்டனர். அவர்களிடம், “முறைப்படி பதவி ஏற்றபின் மோகனூருக்கு வருவேன். அப்போது உங்களை நிச்சயமாக சந்திக்கிறேன்“ என்று சொல்லிவிட்டு தன் பூர்வீக வீட்டிற்கு சென்றார்.

அவரை பார்த்த  ஊர் மக்கள், பாசத்துடன் அவருடன் ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள்.

உலகப்புகழ் பெற்ற மிகப்பெரிய நிறுவனத்தின் உயரிய பதவியில் இருப்பவர், இத்தனை எளிமையாக பழகியதைக் கண்டு ஊர் மக்கள் நெகிழ்ந்துபோய்விட்டனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article