சென்னை:
டாஸ்மாக் மது விற்பனை இரவு 7 மணி வரையும், மேலும் 700 டோக்கன் வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில், உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பு வாங்கி, தமிழக்ததில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை தமிழகஅரசு திறந்து தினமும் 150 கோடிக்கு மேல் வருவாயை ஈட்டி வருகிறது.

தற்போதைய நிலையில், நாள் ஒன்றுக்கு 500 டோக்கனும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் ஏராளமான குடி மகன்கள் சரக்கு கிடைக்காமல் திண்டாடி வருகிறார்களாம். அதன் காரணமாக கடைகளை மேலும் சில மணி நேரம் திறந்து விற்பனை செய்ய கோரிக்கை வைத்துள்ளார்களாம்.
இதனால், தமிழகஅரசும் குடி மகன்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என்பதை இரவு 7 மணி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும், தற்போது வழங்கப்பட்டு வரும் 500 டோக்கனில் இருந்து, நாள் ஒன்றுக்கு 1200 டோக்கனாக உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படும் டாஸ்மாக் கடை விறபனையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel