டெல்லி:
லங்கை அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாரகன் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் மே 18ந்தேதியான இன்று.
இதுகுறித்து இலங்கையில் ஹைகமிஷனராக இருந்தவரும், தற்போதைய மத்திய அமைச்சருமான  ஹர்திப் சிங் பூரி, தனது டிவிட்டர் பக்கத்தில் பிரபாகரனுடன் அவர் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இலங்கையில் தனிநாடு கேட்டு போராடி வந்த இலங்கை விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே உடன்பாடு செய்ய பலமுறை இந்திய அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது. அப்போதைய சூழ்நிலையில்,  இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு செய்யும் பணியில் இந்திய அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது.
அந்த நேரத்தில், 1987ம் ஆண்டு, இலங்கையில் இந்திய அரசு சார்பில் ஹைகமிஷனராக இளம் அதிகாரி ஹர்திக் சிங் பூரி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் இனமோதல்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் செயல்பட்டு வந்தார்.
அப்போது தான் பலமுறை இனமோதல் குறித்து பிரபாகரனை சந்தித்து ஆலோசனை செய்துள்ளதாகவும், இந்திய விமானப்படை விமானம் மூலம் வல்வெட்டித்துறை விமான நிலையம் சென்று சந்தித்து பேசியதாகவும் ஹர்பிரித்சிங் குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்புக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட தான் முயற்சி மேற்கொண்டதாகவும், அதுதொடர்பாக  அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் பலர் இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட துணை நின்றனர் என்று தனது மலரும் நினைவுகைள பகிர்ந்துள்ளார்.
அத்துடன் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2009ம் மே மாதம் 18ந்தேதி ஆண்டு நடைபெற்ற மோதலில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார்.