இன்றும், நாளையும் டாஸ்மாக் கடை மாலை 6 மணி வரை இயங்கும்…

Must read

சென்னை  தமிழகத்தில் வரும் 10ந்தேதி முதல் 15 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், இன்றும், நாளையும் டாஸ்மாக் கடை மாலை 6 மணி இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குடிமகன்களின் வசதிக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும்  2 வாரங்களுக்கு  கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு  அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மே 10 முதல் 24 வரை 15 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளை தளர்த்தியுள்ள தமிழகஅரசு இன்று(சனி), நாளை(ஞாயிறு) அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளும் காலை 8மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 12மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணி வரை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

More articles

Latest article