டாஸ்மாக் மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றம்….!

Must read

சென்னை: தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் மீண்டும் பழைய நேரத்திற்கே மாற்றப்பட்டு உள்ளது. இந்த புதிய நேரம் உடனே அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இயங்கி வந்தது. “கடந்த 24.05.2016 ஆண்டு டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பார்கள் நண்பகல் முதல் இரவு 10.00 மணி வரை செயல்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்து அதன்படி இயங்கி வந்தது.

ஆனால், கொரோனா தொற்று காரணமாக, சில மாதங்கள் அடைக்கப்பட்டிருந்த கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு 05.07.2021 அன்று முதல் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை (10 மணி நேரம்) என டாஸ்மாக்  கடை திறந்திருக்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.  கடந்த பல மாதங்களாக அந்த நேரத்தில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம், பழைய நேரத்துக்கு  மாற்றப்படுவதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் வழக்கமான நேரத்தில் மதியம் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை செயல்பட அனுமதித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.அ

தன்படி, கொரோனா தொற்றுநோய் காரணமாக லாக்டவுன்கள் அறிவிக்கப்படுவதற்கு முன், கொரோனா மேலாண்மைக்கான நிலையான செயல் பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

எனவே, அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் நேர மாற்றத்தைக் கவனித்து, அனைத்து TASMAC மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article