சென்னை: டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் சாமிநாதன்,ர் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதுபோல மின்சாரம், எரிசக்தி, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் மதுபான ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் விற்பனை பணியாளர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள் அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் 500 ரூபாய் கூடுதலாக ஏப்ரல் 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 25,000 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் டாஸ்மாக் சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில், தமிழ்நாட்டில் கொரனா பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடுகளின் படி பல மாதங்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக ஆண்டுதோறும் உயர்ந்து வந்த வருவாய் இந்த ஆண்டு 75 % குறைந்துள்ளது.
2019 – 20 ஆம் ஆண்டில் 33 ஆயிரத்து 133 கோடி ரூபாய் மதுவிற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்திருப்பதாகவும் 2020 -21 ஆம் ஆண்டில் 33 ஆயிரத்து 811 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தாகவும், இந்த ஆண்டு கொரனா பரவல் காரணமாக பெரும்பாலான நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தால் மதுவின் மூலம் 7 ஆயிரத்து 907 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்திருப்பதாகவும், அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 75% வருவாய் கிடைத்திருப்பதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.