
டில்லி:
1300 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து, வழக்கின் விசாரணையை வரும் 23ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மற்ம்,
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகைமாற்றம் செய்து அது தொடர்பாக முறையான அறிவிப்பை வெளியிடாமல், சாலைகளின் பெயர் மாற்றம் செய்யாமல் செயல்பட்டு வந்த மதுபானக் கடைகளை உடனே மூட சென்னை உயர்நீதி மன்றம் கடந்த மாதம் 28ந்தேதி தீர்ப்பு கூறியது.
அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 1300 மதுக்கடைகள் உடடினயாக மூடப்பட்டது.
இந்நிலையில் அதை எதிர்த்து கடந்த 1ந்தேதி தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் சுமார் 5 ஆயிரம் கோடிக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசு கூறியிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், வழக்கில் உத்தரவு எதுவும் பிறப்பிக்க மறுத்துவிட்ட நிலையில், வழக்கு விசாரணையை ஜூலை 23க்கு ஒத்தி வைத்தது.