நடிகை டாப்ஸி தனது இணைய தள பக்கத்தில் பிரைவேஸி என்ற பெயரில் கார்ட்டூன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா ஊரடங்கால் மக்கள் பட்ட அவதியை உருக்கமாக வெளிப்படுத்தி இருக்கி றார். வாகனங்கள் இல்லாமல் மக்கள் சாலை வழியே நடந்து செல்வது, சோற்றுக்காக அடித்துக்கொள்வது. தாய் இறந்தது தெரியாமல் குழந்தை அவரை எழுப்புவது, போலீஸ் அடி என அது நீள்கிறது.
சிலைகளுக்கு கிடைக்கும் மரியாதை கூட மனிதனுக்கு கிடைக்கவில்லை என அவரது பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் காலத்துக்கும் இந்த காட்சிகள் நம்மை விட்டு மறையாது என அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.