சினிமா நடிகைகள் பலரும் சமீபமாக வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். சமந்தா தொடங்கி நித்யா மேனன் வரை வெப் தொடரில் நடிக்கிறார்கள்.

நடிகர் மாதவன் நடித்துள்ள பிரீத் (Breathe) வெப் தொடரின் 2 பாகம் ஜூலையில் ஒளிபரப்பாகிறது. கடந்த 2018-ம் ஆண்டு இந்த வெப் தொடர் அமேஸான் ப்ரைமில் வெளியானது. இத்தொடரின் 2 பாகத்தில் அமிதாப் பச்சன், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். மயங்க் சர்மா இயக்குகிறார்.