மதுரை: மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

தஞ்சை அருகே உள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த பிளஸ் – 2 மாணவி கடந்த சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். மாணவி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் பள்ளி வார்டன் மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தியால் மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக வீடியோ வெளியானது. இதுதொடர்பான சில வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விசாரணைக்கு முன்பே மாவட்ட எஸ்.பி. மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் அல்ல என கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கை  உயர்நீதிமன்றம் மதுரை கிளை  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணை நடத்தி வந்தார்.  காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்ததுடன், இது தொடர்பான வீடியோக்களை முழுமையாக ஆய்வு செய்து விசாரணை நடத்தும் படி கோரிக்கை விடுத்ததுடன், வீடியோ வெளியிட்ட நபரை டார்ச்சர் செய்யக்கூடாது என்றும் கூறியது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர், மதமாற்றம் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறினார். அதுகுறித்து புகாரும் அளித்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் மாணவி தற்கொலை குறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையமும் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவ மதத்துக்கு மாற தனியார் பள்ளி வார்டன் வற்புறுத்தியதால் பிளஸ்2 மாணவி தற்கொலை! வீடியோ…

அரியலூர் மாணவி தற்கொலை: தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தமிழக டி.ஜி.பி-க்கு கடிதம்

மதமாற்ற வற்புறுத்தலால் பிளஸ்-2 மாணவி தற்கொலை? மாவட்ட நீதிபதியிடம் பெற்றோர் வாக்குமூலம்…