சென்னை:
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் (TANCET)  தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு உள்ளது.
எம்பிஏ, எம்சிஏ, முதுகலை  பொறியியல்  படிப்புகளில் சேர டான்செட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டான்செட் தேர்வு கடந்த  பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. அதன் முடிவுகளை  அண்ணா பல்கலைக்கழக  இன்று இணையதளத்தில்வெளியிட்டு உள்ளது.
டான்செட் தேர்வு முடிவுகளை  https://tancet.annauniv.edu என்ற தளத்தில் மாணவர்கள் பார்க்கலாம் என்றும்,   வருகின்ற 23-ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]