“( பீப்) பாட்டுக்காக கைது  என்கிறபோது நாட்டுக்காக, மாட்டுக்காக கைதாகமாட்டேனா?” :  சிம்பு கேள்வி

Must read

சென்னை:

“பாட்டுக்காக கைது செய்வோம் என்கிறபோது என் நாட்டுக்காக, மாட்டுக்காக நான் கைதாகமாட்டேனா” என்று நடிகர் சிம்பு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு தம்முடைய குடும்பத்தினருடன் நேற்று தன் வீட்டு முன்பாக 10 நிமிட மவுன போராட்டம் நடத்தினார். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தை நடத்திய சிம்புவை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, “(பீப்) பாட்டுக்காக கைது செய்வோம் என்கிறபோது என் நாட்டுக்காக, மாட்டுக்காக கைதாகமாட்டேனா?” என்று கேள்வி எழுப்பினார்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கேட்டபோது, “ஒரு படம் வெளியாகும் முன்னரே அதன் கதையை கேட்பது போல அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கேட்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article