நெட்டிசன்:
தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் சோகமான பதிவு இது:

எனது மச்சான் பெயர் பழனிக்குமார்..இராமநாதபுரம் மாவட்டம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியவிற்கு சென்றார். சவூதியில் இயங்கி வந்த group al subaie என்ற நிறுவனத்தில் ஒரு வருடமாக வேலை பார்த்து வந்தார்.. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அதிகமாக கொடுமைப்படுத்தியதால் கம்பெனியே விட்டு வெளியேறி அருகில் இருந்த நண்பர் அறையிலேயே தங்கிவிட்டார்.
பின்பு போலீசிடம் சரண் அடைந்தார். சரண் அடைந்து 9 மாதங்கள் ஆகியும் இந்திய தூதரகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இராமநாதபுரம் ஆட்சி தலைவரிடம் மூன்று முறை புகார் கொடுத்தும் பயனில்லை.
கம்பெனியின் விசிட்டிங் கார்டும், பழனிக்குமார் அவர்களுடைய இக்கமா மற்றும் மாவட்ட ஆட்சி தலைவரிடம் புகார் அளித்த புகார் மனு ஆகியவற்றை இத்துடன் இணைத்துள்ளேன்.

சவுதியில் தவிக்கும் பழனிக்குமாரை இந்தியா கொண்டு வர சமூகவலைதளங்களில் இந்தத் தகவலை பகிரந்து உதவி செய்யுங்கள்.
இப்படிக்கு:
நிலவன் நிலவன் 9600248945
யோக சக்தி 7092720324
Patrikai.com official YouTube Channel