நெட்டிசன்

மிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பதிவில் இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் இருக்காது என தெரிவித்துள்ளார்

அவருடைய பதிவு பின் வருமாறு

Why Chennai wont have any water shortage this year
============================
We have close to 5 tmc of water and compared to last 5 years, this is the 2nd best water level storage we had after the 2015 floods which gave good storage in 2016. In 2017, Chennai had good north east monsoon rains, so this year we will go with nearly 5 tmc of water into Summer.

Even Chennai Metrowater has issued press release not tot believe rumors. The tables are self explanatory.

எதன் காரணமாக இந்த வருடம் நமது சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு என்ற கவலை இல்லை அவை நீங்கி விடும் என்பதை காண்போம்
=========================
நமது தண்ணீர் தேவைக்கு இருப்பாக ஐந்து டி.எம்.சி இருந்து வருவதாக தெரியவருகிறது. கடந்த ஐந்தாண்டு காலங்களில் நமது நீராதார சேமிப்பு வகையில் கண்டால் இரண்டாவது முறையாக மிக சிறந்த வகையில் மழை நீர் மூலம் நமக்கு சேமிப்பாக இவ்வருடம் கிடைத்ததை கூறலாம்.

அது 2015 ஆம் வருட வெள்ள காலத்திற்கும் பிறகு நமக்கு 2016 ஆம் ஆண்டு மிக சிறந்த நீர் சேமிப்பு ஆண்டாக இருந்தது.

சென்ற 2017 ஆம் ஆண்டில் சென்னை தமது வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தினால் பெற்ற மிக சிறந்த மழை அளவினை பெற்றது எனலாம்.

ஆகவே இன்றைய வருட கோடை காலத்தை சமாளிக்க நமக்கு மிக சிறந்த மழையின் கெடையாக கிடைத்த ஐந்து டி.எம்.சி. தண்ணீர் நமது சேமிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் சென்னை குடிநீர் வாரியமும் தமது பத்திரிக்கை தகவல் வாயிலாக செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது

அதாவது சென்னையில் இந்த கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இராது என்றும் மேலும் அதன் பொருட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தமது பத்திரிக்கை செய்தியை மக்களுக்கு தகவலாக தெரிவித்துள்ளது.

அது குறித்து நாம் மேலும் தெளிவாக அறிந்து கொள்ள கீழ் கண்ட அட்டவணை வாயிலாக காணலாம்