டெல்லி பல்கலை.யில் தமிழக மாணவர் தற்கொலை

டெல்லி:

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில். படித்து வந்த மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர் முத்துகிருஷ்ணன் என்பதும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

மாணவர் தற்கொலைக்கு ராகிங் கொடுமையா? அல்லது குடும்ப சூழலா ? என்பது உடனடியாக தெரியவில்லை. டெல்லி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவர் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


English Summary
tamilnadu student commit sucide in delhi jnu