சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக  36,178 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 467 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க தமிழகஅரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 36,178 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 70 ஆயிரத்து 988ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் தொற்றுபாதிக்கப்பட்ட 467பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர்களில் 168பேர் தனியார் மருத்துவமனையிலும், 299பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,598ஆக அதிகரித்துள்ளது.

இன்று 24,478பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,76,761ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 2,74,629ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 267பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 20,425பேர் ஆண்கள், 15,759பேர் பெண்கள். சென்னையில் ஒரேநாளில் 5,913பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.