சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 36,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், உயிரிழப்பும் 467 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும கொரோனா வைரஸின் இரண்டாவது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்தியாவில் உச்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. ஆனால், நாட்டிலேயே அதிக பாதிப்பு தமிழகத்தில் நிகழ்ந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,65,953 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 36,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 17,70,988 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 24,478 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 14,76,761 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.

கொரோனா பாதித்து இன்று மட்டும் 467 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 19,598 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில்  இன்று மட்டும் 5,913 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தொடர்ந்து  கோயம்புத்தூரில் 3,243 பேருக்கும், செங்கல்பட்டில் 2,226 பேருக்கும், ஈரோட்டில் 1,656 பேருக்கும், திருவள்ளூரில் 1,667 பேருக்கும், திருப்பூரில் 1,796 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 283
செங்கல்பட்டு 2,226
சென்னை 5,913
கோவையில் 3,243
கடலூர் 864
தர்மபுரி 387
திண்டுக்கல் 431
ஈரோடு 1,656
கல்லக்குறிச்சி .299
காஞ்சிபுரம் 1,145
கன்னியாகுமரி 1,251
கருர் 344
கிருஷ்ணகிரி 739
மதுரை 1,355
நாகப்பட்டினம் 585
நாமக்கல் 405
நீலகிரி 357
பெரம்பலூர் 202
புதுக்கோட்டை 423
ராமநாதபுரம் 367
ராணிப்பேட்டை 635
சேலம் 725
சிவகங்கை 224
தென்காசி 439
தஞ்சாவூர் 824
தேனி 723
திருப்பத்தூர் 630
திருவள்ளூர் 1,667
திருவண்ணாமலை 726
திருவாரூர் 731
தூத்துக்குடி 882
திருநெல்வேலி 678
திருப்பூர் 1,796
திருச்சி 1,331
வேலூர் 358
விழுப்புரம் 490
விருதுநகர் 850