சென்னை: தமிழ்நாட்டில் 12-15 வயதுக்குள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக  3,89,000 தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம், வரும் 27ந்தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உட்பட மாநிலம் முழுவதும 43,051 இடங்களில் போலியோ சிறப்பு முகாம் நடைபெறும் என்று கூறியவர், அந்த முகாமில்  5 வயதிற்குட்பட்ட 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து போட வேண்டிய குழந்தைகள் எண்ணிக்கை 57,61,000 என்று கூறியவர், தமிழ்நாட்டில் போலியோ பாதிப்பே இல்லை என்ற நிலை உள்ளது என்பதையும் நினைவுகூறினார்.

மேலும், தமிழ்நாட்டில்  அடுத்த கட்டமாக 12-15 வயது உடைய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 12 முதல் 15 வயதிற்குள் சுமார்  10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு போடப்படுவதற்கான 3,89,000 தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன என்று கூறியவர், இந்த தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்தியஅரசு அறிவித்ததும், சிறார்களுக்கு போடும் பணி தொடங்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர்,