தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்…!

Must read

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் மீதும் அவரது நிர்வாகத்தின் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக் காலம் முடிந்த பிறகும் விஷால் தொடர்கிறார்.வைப்புநிதியாக உள்ள 7 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளார். பணியாற்றும் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தில் முறைகேடு நடந்துள்ளது” போன்ற எண்ணற்ற குற்றசாட்டுகள் முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதன்படி, என்.சேகர் என்ற அதிகாரியை தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழக அரசு நியமித்தது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நயமிக்கப்பட்டுள்ள அட்டாக் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்ப்பட்டுள்ளனர்.

அவர்கள், இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர் எஸ்வி சேகர், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதிஷ்குமார், நடிகர் கே.ராஜன், தயாரிப்பாளர் டி.சிவா, தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர் துரைராஜ், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இனி இவர்களின் கீழ் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article