சென்னை,

தமிழகத்தின் 13வதுமுதல்வராக எடப்பாடி பழனிச்சாமி  பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ்  பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு உறுதி மொழியும்  செய்து வைத்தார்.

முதலில் மூத்தஅமைச்சர்கள்  4பேர் பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து சிறு சிறுகுழுக்களாக அமைச்சர்கள் பதவி ஏற்று வருகின்றனர். 4.30 மணிக்கு ஆரம்பமான பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி 4.57 மணிக்கு முடிவடைந்து, தேசிய கீதம் பாடப்பட்டது. சுமார் 25 நிமிடங்களுக்குள் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்று முடிந்தது.

அதைத்தொடர்ந்து 31 அமைச்சர்களுடன் கவர்னர் வித்யாசாகர் ராவுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த விழாவில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.