
சென்னை
ஜிஎஸ்டி மசோதாவுக்கு தமிழ்நாடு சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது
வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமுல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் ஜிஎஸ்டி மசோதா ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஆளும் கட்சியினரைத் தவிர மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே, சரவணம் எம்.எல்.ஏ. டேப் விவகாரம் நடுவில் வந்ததில் இந்த மசோதா பற்றிய விவாதம் வரவில்லை.
இன்று திமுக வின் செயல்தலைவர் இதை கடுமையாக எதிர்த்ததோடு, வெளிநடப்பும் செய்தார்.
பின்பு ஆளும் கட்சியினர் ஆதரவுடன் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது/
Patrikai.com official YouTube Channel