தமிழக உள்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Must read

சென்னை

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில நாட்களாகவே தமிழகத்தில் அதிக வெப்பம் இருந்து வந்த நிலையில் இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

புரசைவாக்கம், ஈ சி ஆர், திருவான்மியூர், அண்ணா நகர், சூளைமேடு, நுங்கம்பாக்கம், அமைந்தகரை, சேத்துப்பட்டு, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இது குறித்து அறிவித்த சென்னை வானிலை ஆய்வு மையம், “தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், இம்மாதம் 30 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்” எனவும் தெரிவித்துள்ளது.

More articles

Latest article