சென்னை: தமிழகத்திற்கு மத்தியஅரசு இதுவரை அனுப்பியுள்ள 82.49லட்சம் டோஸில், 74.82 லட்சம் டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தீவிர தாக்கத்தை தடுக்க தமிழகஅரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், தமிழகத்திற்கு மத்தியஅரசு இதுவரை 45வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த அனுப்பியுள்ள 82.49,710 லட்சம் டோஸில், இதுவரை (27ந்தேதி மாலை வரை) 74,82.,621 லட்சம் டோஸ் பயனர்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. இது 91 சதவிகிதம்.
அதுபோல 18வயது முதல் 434 வயது வரை உள்ளவர்களுக்கு செலுத்த மத்தியஅரசு சார்பில் 13,10,270 டோஸ்கள் அனுப்பப்பட்டு உள்ள நிலையில், தற்போது வரை 9,67,494 டோஸ் பயனர்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. இது 74 சதவிகிதம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மொத்தத்தில், தமிழகத்திற்கு மத்தியஅரசிடம் இருந்து இதுவரை 95,59,980 டோஸ் மருந்துகள் பெறப்பட்டுள்ள நிலையில், 84,50,115 டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளது. அதாவது 88 சதவிகித மருந்துகள் பயனர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன என தமிழகஅரசு வெளியிட்டுள்ள தரவில் கூறப்பட்டுள்ளது.