ஊரடங்கு காரணமாக கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் 15 நலவாரிய தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய இவர்கள் வாழ்வாதாரம் இழந்து எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அதனால் தமிழக அரசு இவர்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 5000 மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கவேண்டும் என்று இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் வாழப்பாடி இராம. கர்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள நலவாரிய உறுப்பினர்கள் தங்கள் பதிவை புதுப்பிக்க இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்தாலும் பல இலட்சகணக்கான தொழிலாளர்களுக்கு நலவாரிய பதிவு அட்டை கிடைக்காததோடு கடந்த 2019 – 2020 மற்றும் 2020 – 2021 தொழிலாளர்களால் எந்த உதவி விண்ணப்பங்களும் பதிவேற்றும் வசதியும் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

2019ல் இருந்து தொழிலாளர்களால் வழங்கப்பட்ட உதவி விண்ணப்பங்களில் பெருவாரியான விண்ணப்பங்களுக்கு உதவி நிதியும் வழங்கப்பட்டவில்லை.

தொழிலாளர்களுக்கு கிடைகாதுள்ள 2019-2020 மற்றும் 2020 – 2021 ஆண்டு வழங்கப்பட்ட உதவி விண்ணப்பங்களுக்கு உரிய உதவி நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ள அவர்.

தொழிலாளர்கள் இணையதள வழியில் பதிவு புதுப்பித்தல் உதவி விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதில் எளிய நடைமுறையை கொண்டுவந்து தொழிலாளர்களுக்கு உதவவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசு பதவியேற்றவுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2000 நிவாரணம் வழங்கியதை பாராட்டிய வாழப்பாடி இராம. கர்ணன், நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ. 5000 நிவாரணத்துடன் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்த உதவி நிதி முழுமையாக கிடைக்கப் பெறாதவர்களுக்கு அந்த உதவி நிதியை முழுமையாக வழங்க ஆவண செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.