சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, போராடிய அப்பாவி மக்கள்மீது துப்பாக்கி சூடு நடத்த காரணமாக இருந்தவரும், விசாரணை கமிஷன் குற்றம் சாட்டி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்ட காவல்துறை அதிகாரியை, திமுக அரசு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி அழகு பார்த்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

”ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை 2022 அக்டோபர் மாதம் வெளியானது. இந்த அறிக்கை பல்வேறு குற்றங்களை வெளிக்கொண்டுவந்தது. அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ், தென் மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

ஆனால், குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுகஅரசு, அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அழகு பார்ப்பது கடுஐமயான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

2018 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் கமிட்டியின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் காவல்துறை இயக்குநராக (டிஜிபி) பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாடு சிலைப் பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநராக (ஏடிஜிபி) பணியாற்றிய ஷைலேஷ் குமார் யாதவ், இப்போது தலைவராக உயர்வு பெற்றுள்ளார்.

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில், காவல்துறை நடவடிக்கைகளில் வரம்பு மீறல் இருந்தது என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே இறந்த 5 பேர்களின் கைகளில் எந்த ஆயுதமும் இல்லை என்றும் முதல் துப்பாக்கி சூடு நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்ட பின்பு தான் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள்ளே முதல் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக தீ வைக்கப்பட்ட பின்பு துப்பாக்கி சூடு நடைபெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஆணையம், “ துப்பாக்கி சூடு நடைபெறும் போது கடைபிடிக்க வேண்டிய படிப்படியான அணுகுமுறையை இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கையாளப்படவில்லை. தப்பி ஓடிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு பிரயோகம் செய்திருப்பது, அவர்கள் பின்மண்டையில் குண்டு புகுந்து முன்பகுதியில் வெளியேறியதன் மூலம் தெரியவந்தது. இறந்தவர்கள் அனைவருக்கும் இடுப்புக்கு மேல் தான் காயம் ஏற்பட்டுள்ளது. காவலர்களுக்குள் கூட்டு ஒருங்கிணைப்பு இல்லை” என தெரிவித்துள்ளது.

மேலும், டி ஐ ஜி மற்றும் உதவி எஸ்பி உத்தரவிட்ட துப்பாக்கி சூடு ஐ.ஜி.க்கு கூட தெரியவில்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், “ஐ ஜி மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள்ளே இருந்தும் டி ஐ ஜி தானாகவே துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். உளவுத்துறை எச்சரித்திருந்த போதும் அதற்கேற்ற உத்திகளை மேற்கொள்ளாதது ஐ ஜி.யின் தவறு. போரட்டக்காரர்களால் ஏற்படும் தீமையை விட துப்பாக்கி சூட்டால் நடத்தப்பட்ட தீமையே அதிகம்” என்று தெரிவித்துள்ளது. விளம்பரம் துப்பாக்கி சூட்டால் இறந்தவர்கள் குறித்து ஆங்காங்கே நின்று சிலாகித்துக் கொண்டிருந்தவர்கள் மீது எஸ்.பி. துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் எனவும் சுடலைக்கண்ணு என்ற Shooter காவலர், அபாயகரமான துப்பாக்கியைக் கொண்டு 17 ரவுண்டுகள் சுட்டிருக்கிறார். காட்டில் வேட்டையாடுவது போல் அவர் செயல்பட்டுள்ளார். உணர்ச்சிவசப்பட்டு எஸ் பி தனது பாதுகாவலரின் துப்பாக்கியையே வாங்கி 9 ரவுண்ட் சுட்டு உள்ளார். இந்த காரணங்களால் காவல்துறையினர் வரம்பு மீறி செயல்பட்டு இருக்கிறார்கள் என்பது ஆணையத்தின் தீர்க்கமான முடிவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக  அரசு, அவருக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசின் நடவடிக்கைக்கு கூட்டணி கட்சியான  கம்யூனிஸ்டு கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கையில்,  ”ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை 2022 அக்டோபர் மாதம் வெளியானது. இந்த அறிக்கை பல்வேறு குற்றங்களை வெளிக்கொண்டுவந்தது. அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ், தென் மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.” என்பதைச் சுட்டிக்காட்டி திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும், அன்றைய தென்மண்டல ஐஜி சைலேஷ் குமாருக்கு பணி மூப்பு அடிப்படையில் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது; இதை மறுபரிசீலனை செய்வதோடு, சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விரைந்து தண்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூதியுள்ளது.

”ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை 2022 அக்டோபர் மாதம் வெளியானது. இந்த அறிக்கை  பல்வேறு குற்றங்களை வெளிக்கொண்டுவந்தது. அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ், தென் மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.” என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,

”அருணா ஜெகதீசன் அறிக்கை வெளியாகி ஓராண்டான நிலையில், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் கே.எஸ். அர்ஜுனன் தொடர்ந்த வழக்கில் மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரையும் விசாரித்து ஆறு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியது. ஆனால், இந்நிலையில் அன்றைய தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் இப்போது டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளது பணி மூப்பு அடிப்படையில் என்றாலும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி” என்று அதிருப்தி தெரிவித்துள்ளது.

”துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமானவர்கள் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், தற்போது சைலேஷ் குமார் யாதவ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டிஜிபி பதவி உயர்வினை மறுபரிசீலனை செய்து ரத்து செய்திட வேண்டுமெனவும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வழக்கில் குற்றவாளிகள்  அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தயங்குவது உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு தூண்டுகோளாக அமைந்து விடும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.” என்று பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.