சென்னை: தமிழ்நாடு தீயணைப்புத்துறை வரலாற்றில், முதன்முறையாக தீயணைப்புத் துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐபிஎஸ் அதிகாரியை,  ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு அரசுத்துறை அலுவலகம் அமைந்துள்ள எழிலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தின்போது, தீயணைப்பு துறைஅதிகாரியாக இருந்த பிரியா ரவிச்சந்திரன் மீட்பு பணியின்போது, பலத்த தீக்காயம் அடைந்தார். இதையடுத்து அப்போதைய முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா, அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ததுதன், அவரை மிகவும் பாராட்டினார். அவரது முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் என அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையில் பணியாற்றி வந்த பிரியா ரவிச்சந்திரன் பதவி உயர்வு பெற்ற  தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் இணை இயக்குனாராக திறமையாக பணியாற்றி வந்தார்.

தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் இணை இயக்குநராக பணியாற்றும் பெண் அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் (Non state Civil service) ஒதுக்கீட்டிலிருந்து ஐஏஎஸ்ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.  அவரை, தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நியமித்து  மத்திய அரசு  உத்தரவிட்டு உள்ளது.  மாநில அரசுப் பணியில் இருந்து 2022-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ் பிரிவு அதிகாரியாக பிரியா தோவாகியுள்ளாா்.

கடந்த 2003-ம் ஆண்டு தமிழக அரசின் குரூப் 1 அதிகாரியாக பணியில் சேர்ந்த பிரியா ரவிச்சந்திரன், தீயணைப்புத் துறையில் பணியாற்றி, இணை இயக்குநர் நிலைக்கு அவர் உயா்ந்தாா். மாநில அரசின் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் காலியாக உள்ள குறிப்பிட்ட சில இடங்களுக்கு குரூப் 1 அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவர். இந்த நடைமுறையின்படி, 2022-ம் ஆண்டு காலியாகவுள்ள இடத்துக்கு தீயணைப்புத் துறை இணை இயக்குநா் பிரியா ரவிச்சந்திரன் தோவாகியுள்ளாா்.

தீயணைப்புத் துறையில்  வரலாற்றில் ஐபிஎஸ்  ஒருவா் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வாகி இருப்பது  முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.