சென்னை: ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்திற்கபான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளி யிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில், மக்கள் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைவதை கண்காணிக்கும் பொருட்டு, உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதாவது, ஆட்சியர்கள், அதிகாரிகள் அரசு இயந்திரம், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், மக்களைத் தேடிச் சென்று பணியாற்ற வேண்டும். மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளதுடன், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளது.
இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதில்,
” ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம் ஒவ்வொரு மாதமும் 4-வது புதன்கிழமை நடத்தப்பட வேண்டும்.
ஜனவரி முதல் டிசம்பர் வரை ஆண்டு முழுவதும் அனைத்து தாலுகாக்களும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில், ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ஆண்டிற்கான அட்டவணையை மாவட்ட ஆட்சியர் வரைய வேண்டும்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அலுவலர்கள், நிலுவையில் உள்ள மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம்கள் நடத்துவது குறித்த அறிக்கையை ஒவ்வொரு மாதம் 5-ம் தேதிக்கு முன், கூடுதல் தலைமைச் செயலர்/வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும்”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.