சென்னை : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுவதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் காரணமாக, தொற்று பரவலும் தீவிரமடைந்து வருகிறது.  நேற்று ஒரே நாளில்  2,342 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்புக்கு  தேர்தல் பிரசார கூட்டங்களே காரணம் என மருத்துவ நிபுணர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், தளர்வுகள் காரணமாக நடத்தப்பட்டு வரும் மதக்கூட்டங்கள், , உள் அரங்க நிகழ்வுகளாலும் கொரோனா பரவுகிறது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும் கொரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்றும்  தெரிவித்துள்ளது.  மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.