மும்பை:

தமிழக கவர்னர்  வித்யாசாகர் ராவ் மும்பையில் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.


மும்பையில் 2 நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அவர் நாளை காலை சென்னை செல்வார் என்றும் மகாராஷ்டிர கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். இவருக்கு பதிலாக சட்டமன்ற குழு தலைவராக சசிகலாவை அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்துள்ளனர்.

மேலும், முதல்வராக சசிகலா பதவி ஏற்க சட்ட வல்லுனர்களின் கருத்தை கவர்னர் கோரியிருந்தார். இதனால் பதவி ஏற்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கவர்னரின் சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதுள்ளது.