காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தரிசனம் மேற்கொண்டார்.

புகழ்மிக்க காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. காலை 5 மணிக்கு அத்திவரதருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. சுப்ரபாத சேவையுடன் காஞ்சிபுரம் இட்லி, வெண்பொங்கல், சக்கரை பொங்கல், லட்டு, ஜிலேபி படையிலடப்பட்டு நெய் வேத்யம் நடைபெற்றது. காலை 6 மணி அளவில், அத்திவரதரை தரிசிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது அத்திவரதரை தரிசிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்திருந்தார். அவரது வருகை காரணமாக, பக்தர்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.