சென்னை:
ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மறைந்த பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் 26 ஆண்டுகள் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்ப்பதற்கு பரோலில் விடுவிக்க பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார். பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பேரறிவாளனை பரோலில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கான அரசாணை வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ‘‘ பேரறிவாளன் தாயார் கோரிக்கை மனுவை ஏற்று அவரை பரோலில்விட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாணை கிடைத்தவுடன் அவர் பரோலில் விடுவிக்கப்படுவார்’’ என்றார்.