சென்னை:

தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் புகழேந்தி என்பவர் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘‘கடந்த பிப்ரவரியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக 112 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். தற்போது 19 பேர் முதல்வர் மீது நம்பிக்கையில்லை என கவர்னரிடம் மனு அளித்துள்ளனர்.

எனவே, பெரும்பான்மையை இழந்துவிட்ட எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர் புகழேந்தி தினகரன் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. தங்கள் கோஷ்டியை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி சபாநாயகர் விளக்கம் கேட்டுள்ளதால் அதற்கு பதிலடி கொடுக்கம் விதமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.