சென்னை: தமிழ்நாட்டில், தச்சர், கொல்லர் தொழில் செய்வோருக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் தச்சர், கொல்லர் தொழில் செய்வோருக்கு ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணி புரிவோருக்கு தனித்தனியே குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் கட்டாயம் தரவேண்டும் என்றும் ஆண், பெண் என ஊதியத்தை பிரிக்க முடியாது எனவும் தொழிலாளர்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Patrikai.com official YouTube Channel