சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார காலகெடு இன்றுடன் முடிகிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் (திட்டம்) தொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைப்படுத்தாது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் மோடியை சந்திப்பது குறித்தும் விவாதித்துள்ளர்.

அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை எட்டவும், மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யவும் அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிது. இதற்காக தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் நாளை இரவு டில்லி செல்கின்றனர்.