தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் திடீர் ராஜினாமா!


சென்னை:

மிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜ ரத்தினம் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக் குமாரசாமி திடீரென ராஜினாமா செய்துள்ள நிலையில்,  தற்போது குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ராஜரத்தினமும் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞராக இருந்து வந்தவர் ராஜரத்தினம். ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்காக வாதாடிய குமாரின் ஜூனியராக இருந்தால், அவரை அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஜெயலலிதா நியமித்து இருந்தார்.

ராஜரத்தினம்  தற்போது டிடிவி தினகரன் மீதான அந்நியச்செலாவணி வழக்கில் ஆஜராகி வாதாடி வருகிறார். மேலும், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சார்பாகவும் வாதாடி வருகிறார்.

இதன் காரணமாக அரசு கொடுத்த நெருக்கடி காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ள ராஜரத்தின்ம், தனது சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக  ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நிலவி வரும் பரபரப்பான சூழலில் தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Tamilnadu Government Chief criminal lawyer suddenly resigned!