விடைபெற்றார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

சென்னை :

மிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்ட கடந்த ஓராண்டுக்குமேல் பணியாற்றி வந்த வித்யாசாகர் ராவுக்கு சென்னை விமான நிலையத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை சென்னை வருகிறார். இந்நிலையில், தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவ், இன்று மும்பை புறப்பட்டுச் சென்றார்.

அவருக்கு சென்னை விமான நிலையத்தில் பிரிவு உபசார வழியனுப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிஜிபி ராஜேந்திரன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்துகொண்டு பொன்னாடை போர்த்தி வழியனுப்பி வைத்தனர்.

கடந்த ஓராண்டாக  தனக்கு ஒத்துழைப்பு அளித்த அதிகாரிகள், அமைச்சர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக  வித்யாசாகர்  கூறினார்.
English Summary
Governor Vidyasagar rao leave from Tamilnadu, farewell today