சென்னை: கொரோனாவால் மரணம் அடைந்த குடும்பத்தினர் அரசின் கருணைத் தொகைக்கு 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அதன்படி, கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசின் நிதி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி,  https://chennai.nic.in/ என்ற இணையதள முகவரியில், இறந்த வர்களின் சான்றிதழ் உள்பட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதற்கான ஆவணம், மருத்துவ சிகிச்சைக்கான ஆவணங்கள், மயான சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ். வங்கி கணக்கு விவரம் போன்ற முழுமையான ஆவணங்களுடன்  பல்வேறு சான்றுகள்  பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதை ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய கருணைத்தொகை ரூ.50ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் குறித்து 90 நாட்களுக்குள் கருணைத் தொகைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 74,097 விண்ணப்பங்கள் பெறப்பட்டு,  கருணைத்தொகை மற்றும் 55,390 விண்ணப்பதாரர் களுக்கு தலா ரூ. 50ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.