சென்னை: அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, மனித வள மேலாண்மை துறை 2021-2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணி இடங்கள் அனைத்திலும் தமிழ் இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு தேர்வுகள் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடல் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்படும்.
வேலைவாய்ப்பில் முன்னுரிமை. ( வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்றன அரசுப் பணியிடங்களில் பின்வரும் இனத்தவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் ) கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பணியாளர் தேர்வு முகமை நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால் நேரடி நியமன வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீட்டினை 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும். மாற்றத்தை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம் முக்கியமான என்பதை உணர்வு, நேரடி நியமனம் மூலும் மேற்கொள்ளப்படும் அரசுப் பணி நியமனங்களில், பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30% ஒதுக்கீட்டினை 40% ஆக உயர்த்திட உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும்.
தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ரூபாய் 15 லட்சம் செலவில் மடிக்கணினிகள் மற்றும் அதைச் சார்ந்த மென்பொருட்கள் வழங்கப்படும்.
அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் மற்றும் .அ.மற்றும் ஆ பிரிவு அடிப்படை பயிற்சி நிலையத்தில் கணினி ஆய்வகத்தின் பதிப்பிக்கும் பொருட்டு என்பது ஒரு லட்ச ரூபாய் செலவில் கணினி அச்சுப்பொறி மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்
முதன்மைப் பேச்சு நிறுவனமான அண்ணா மேலாண்மை நிலையத்தில் மாநில மத்திய அரசு மற்றும் பொதுப்பணித் துறை நிறுவன அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன பல்வேறு இடங்களிலிருந்து வரும் பயிற்சியாளர்கள் அண்ணா மேலாண்மை நிலையத்தை வந்தடையும் அங்கிருந்து பயிற்சி தொடர்பான தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல இடங்களில் செல்லவும் பயிற்சியாளர்களுக்கு போக்குவரத்து வசதிக்காக 40 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு மினி பேருந்துகள் வாங்கப்படும்
அண்ணா மேலாண்மை நிலையத்தில் காட்சி ஊடக பாதை செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஒரு படப்பிடிப்புத் தளம் அமைக்கப்படும் அதற்கான அனைத்து உபகரணங்களும் வாங்கப்படும்
மாநில அரசு பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் முதல் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சத்துணவு பணியாளர்கள் அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் அரசு விடுதி காப்பாளர்கள் மற்றும் முறையான பயிற்சி பெறாத அனைத்து துறை பணியாளர்களுக்கும் அண்ணா மேலாண்மை நிலையத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் அதற்காக இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.