சென்னை: திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் காங்கிரஸ், கொங்குநாடு கட்சி எம்எல்ஏக்களுக்கும் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இன்றைய அமர்வில், முதல்வர மு.க.ஸ்டாலினின் மகனும்,  சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதிக்கு புதிய பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அண்ணா பலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படு வதாக சபாநாயகர் அப்பாவு இன்று அறிவித்தார்.

திமுக தலைவரின் மகனும், நடிகர் மற்றும் படத்தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக சார்பில்,  தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, தொகுதிக்கு அவ்வப்போது சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து, அதை நிவர்த்தி செய்து வருகிறார். கொலோனா ஊரடங்கு காலக்கட்டத்தின்போது அவரது ஏழை மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ( ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்) உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.. அலுவல் சாரா உறுப்பினராக மூன்றாண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக கொங்குநாடு கட்சியைச் சேர்ந்த  ஈஸ்வரன், காங்கிரஸ் கணேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார்.