சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த 6 பேருக்கு தமிழகஅரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் 75வயது சுதந்திர தினம் வரும் 15ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி,  மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள், நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி சிறந்த மாவட்ட ஆட்சியராக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மேலும் சிற்நத மருத்துவராக ஊட்டி மருத்துவர் ஜெய்கணேஷ், சிறந்த நிறுவனமாக ரேனாசான்ஸ் அறக்கட்டளை, சிறந்த சமூக பணியாளராக திருமதி அமுதசாந்தி, அதிக அளவில் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்திய நிறுவனமாக டாபே ஜெரிஹாப் சென்டர், சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கியாக திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.