சென்னை :

மிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட வாரியான பட்டியல்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1430 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,79,046 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,694 பேர் உயிர் இழந்து 7,56,279 பேர் குணம் அடைந்து தற்போது 11,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,14,577 பேர் பாதிக்கப்பட்டு இதில் 2,06,897 பேர் குணம் அடைந்து தற்போது 3,837 பேர் சிகிச்சையில் உள்ளனர், 3,843 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது இங்கு இன்று 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கோவை மாவட்டத்தில் 48,421 பேர் பாதிக்கப்பட்டு 611 பேர் உயிர் இழந்துள்ளனர். 46,991 பேர் குணம் அடைந்து தற்போது 819 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 80 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 40,812 பேர் பாதிக்கப்பட்டு 39,648 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 513 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் இங்கு இதுவரை 651 பேர் உயிர் இழந்துள்ளனர்.