சென்னை: தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள முதல்வர் ஸ்டாலின், மேலும் மேலும் 50லட்சம் டோஸ் தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் பரவலை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை ஜூன் மாதத்துக்கான முதல் தவணை மத்தியஅரசிடம் இருந்து தடுப்பூசி வந்தடைந்தது. தமிழகத்திற்கு தேவையான 4,20,570 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் நேற்று சென்னை வந்தன.
இந்த நிலையில், தமிழக தேவைக்கு ஏற்ப போதிய தடுப்பூசி வழங்க்கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் ர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில், தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென என வலியுறுத்தி உள்ளார்.
மேலும் மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே த தமிழக மக்கள் தொகை, கொரோனா பாதிப்புக்கு ஏற்ப தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும்.
தமிழக அரசு ஒரு கோடி தடுப்பூசி கேட்டிருந்த நிலையில் இதுவரை 42 லட்சம் தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதனால், தமிழகத்திற்கு உடனடியாக 50 லட்சம் தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்கிட வேண்டும்.
ஜூன் மாதத்திற்கான தடுப்பூசியை முதல் வாரத்திலேயே வழங்கினால் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து மேற்கொள்ள வசதியாக இருக்கும்.
பிற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்தது போல் தமிழகத்திற்கும் தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.