ஓகி பாதிப்பு- ஆர்.கே. நகரில் முதல்வர்

சென்னை: 

கி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை இன்று முதல்வர் பழனிசாமி பார்வையிட செல்கிறார்.

தமிழகத்தில் ஓகி புயலால், பல தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இவற்றில் கன்னியாகுமரி மாவட்டம் மிகக் கடுமயாக பாதிக்கப்பட்டது. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற பல நூறு மீனவர்களைக் காணவில்லை. சிலர் மீட்கப்பட்டாலும் இன்னும் பல மீனவர்கள் பற்றிய தகவல் இல்லை.

ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் கலந்துகொண்டிருந்தார். மேலும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.

இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. ஊடகங்களும் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தன. பல கட்சித் தலைவர்களும் எடப்பாடி பழனிச்சாமியை குறை கூறினர்.

நிவாரணப்பணிகள் சரிவர நடக்கவில்லை, காணாமல் போன மீனவர்களைக் கண்டபிடிக்கவும் சரியான நடவடிக்கை இல்லை என்று குமரி மாவட்ட மக்களும் போராட்டங்களை நடத்த வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில் ஓகி புயல் பாதிப்புகளை காண எடப்பாடி பழனிச்சாமி இன்று கன்னியாகுமரி செல்கிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும்  அவர் அங்கிருந்து சாலை வழியாக குமரி செல்ல இருக்கிறார்.