கோவை:

வைகோவை மலேசியாவில் நுழைய அனுமதி மறுத்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவை விமானநிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வைகோ அண்ணனிடம் மலேசியா அரசு நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது இது பற்றி அதிமுக அம்மா அணி சார்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப்படும்’’என்றார்.

அ.தி.மு.க அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், ‘‘திமுக தலைவர் வைகோவை மலேசியா அரசு நடத்திய விதம் அதிர்ச்சி அளிக்கிறது. முறையாக விசா பெற்று சென்றவரை, தனி அறையில் அடைத்து வைத்து, இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய வெளியுறவு துறை இதுகுறித்து மலேசியா அரசிடம் விசாரித்து, தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.