இன்று   தமிழக அமைச்சரவை கூட்டம்: வெளிநாடு செல்கிறார் ஜெ.?

Must read

சென்னை:
மிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா லண்டன் செல்கிறாரா என்கிற யூகம் எழுந்துள்ளது.

ஜெயலலிதா - பன்னீர் செல்வம் ( கோப்புபடம்)
ஜெயலலிதா – பன்னீர் செல்வம் ( கோப்புபடம்)

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வருக்கு இன்னும் மேலும் சில நாட்கள் சிகிச்சையும், ஓய்வும் தேவை என்று அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த இலாகாக்கள் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் தமிழக  நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், இன்று காலை 9.30 மணியளவில் தமிழக  அமைச்சரவை கூடுகிறது. இந்த கூட்டத்தில் அரசு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது; உயர் நீதிமன்ற உத்தரவுபடி, உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்க, அவசர சட்டம் கொண்டு வருவது மற்றும் காவிரி நதி நீர் விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த மே., மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக அரசு பொறுப்பேற்றப்பின் நடைபெற இருக்கும் முதல் அமைச்சரவை  கூட்டம் இது.
மேல் சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்படுகிறார் என்றும் லண்டன் அழைத்துச் செல்லப்படுகிறார் என்றும் இருவித யூகங்கள் கிளம்பியுள்ள நிலையில் இக்கூட்டம் நடக்கிறது. ஆகவே சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
.
 

More articles

Latest article