
சென்னை,
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலையில் ஆரம்பமானது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற கூட்டம் முடிவடைந்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக முதல்வராக ஓபிஎஸ் பதவி ஏற்றார். தொடர்ந்து அடிக்கடி அமைச்சரவை கூட்டத்தை கூட்டி விவாதித்து வருகிறார்.
கடந்த ஒரு மாதத்திற்குள் 3வது தடவையாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி உள்ளார்.
இன்று காலை 9 மணி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை தலைமை செயலகம் வந்த ஓபிஎஸ் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், புதிய தலைமை செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் உயிரிழப்பு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
[youtube-feed feed=1]