திமுக: தலைமை பொறுப்பேற்றார் ஸ்டாலின்!

Must read

சென்னை,

திமுக செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று காலை திமுக பொதுக்குழு சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழுவில் இதில் திமுக  செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் காரணமாக தீவிர கட்சி பணிகளில் ஈடுபட முடிய வில்லை. ஆகவே இனி, திமுக சார்பாக எடுக்கப்பட வேண்டிய  முக்கிய முடிவுகள் அனைத்தும் ஸ்டாலினே  முடிவு எடுப்பார்.  ஆகவே இனி கட்சியின் நிஜ தலைவராக ஸ்டாலினே செயல்படுவார்  என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

(விரிவான செய்திகள் இன்னும் சிறிது நேரத்தில்)

More articles

Latest article